News December 26, 2024
பெரம்பலூர் அருகே பெண்ணிடம் ரூ.63 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பெரம்பலூர் மாவட்டம், அயிலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாரி எனும் பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.63,87,620 ஏமாற்றிய வடமாநில குற்றவாளிகள் 2 பேரை பெரம்பலூர் சைபர் குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் குற்றவாளிகள் வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மக்கள் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News September 23, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள (bc/mbc/dnc) ஆகிய பிரிவு மாணவர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற 30-09-2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News September 23, 2025
பெரம்பலூர் விளையாட்டு வீரர்களுக்கு Good News

பெரம்பலூர் மக்களே தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் (08/09/2026) அன்று பெரம்பலூர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் மைதானத்தில் நடைபெறுகின்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்து மற்றும் மேசைப்பந்து போட்டிகள் இடம்பெறுகின்றன. உங்கள் பகுதியினருக்கும் SHARE பண்ணுங்க!
News September 23, 2025
பெரம்பலூர் விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை அடுத்து, மழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்தநிலை ஏற்பாடுகளை விவசாயிகள் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர்கள், ஆலத்தூர்- 9597045973, பெரம்பலூர் – 9944645189, வேப்பந்தட்டை- 7502702758 வேப்பூர் – 9786377886 தொடர்பு கொண்டு பயன்படலாம் என கூறியுள்ளார்.