News September 23, 2024

பெரம்பலூர் அருகே காட்டில் வேட்டையாடியவர்கள் கைது

image

பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு செஞ்சேரி காப்பு காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக 6 போ் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது, எறும்பு தின்னியை விற்பனை செய்வதற்காக அவர்கள் வேட்டையாடி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 20, 2024

ரேஷன் கடை வேலைவாய்ப்பு: நேர்முகத் தேர்வு அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 31 விற்பனையாளர் பணிகளுக்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத்தேர்வு நவம்பர் 25ஆம் தேதி துவங்கி, நவம்பர் 29 வரை பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மேலும் நேர்முகத் தேர்விற்கான அனுமதிச்சீட்டினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்யவும்

News November 19, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TAMCO) மூலமாக வழங்கப்பட்டு வரும் பல்வேறு கடன் மற்றும் கல்வி கடன் திட்டங்களுக்கு ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் தகுதி உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் நவம்பர் 19-ஆம் தேதியான இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

தனியார் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்சர்

image

சென்னை அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய “புத்துளிர் 2024” மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற பெரம்பலூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆசிரியர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.