News December 14, 2025

பெரம்பலூர்: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு…

image

பெரம்பலூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News March 2, 2026

பெரம்பலூர்: வாக்கு சேகருப்பில் ஈடுபட்ட மகளிரணி

image

பெரம்பலூர், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் நகரம் 1வது வார்டு பகுதியில், திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று, திமுகவின் ஐந்தாண்டு சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தனர். இதில், ஏராளமான மகளிர் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

News March 2, 2026

பெரம்பலூர்: பிளஸ் 2 தேர்வு எழுதும் 7276 மாணவர்கள்

image

பெரம்பலூர், தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இதனையடுத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வை 82 பள்ளிகளை சேர்ந்த 3,783 மாணவர்களும், 3,493 மாணவிகளும் என மொத்தம் 7,276 பேர், 36 தேர்வு மையங்களில் எழுதுகிறார்கள். மாணவ – மாணவிகள் முதல் தேர்வாக தமிழ் தேர்வினை இன்று எழுதுகிறார்கள்.

News March 2, 2026

பெரம்பலூர்: தெரு நாய் கடித்து மான் உயிரிழப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் எழுமூர் கிராமப் பகுதிக்குள் பெண் மான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. இந்த மானை அப்பகுதியில் சுற்றி தெரியும் தெரு நாய்கள் கடித்ததில் மான் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலை அறிந்து வனத்துறையினர் விரைந்து வந்து மானை முருக்கன்குடி காப்பு காட்டில் புதைத்தனர்.

error: Content is protected !!