News September 6, 2025

பெரம்பலூர் :அரசு தொடக்கப் பள்ளியில் தீ விபத்து

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பர்னிச்சர்கள் மற்றும் பழைய காகிதங்கள் எரிந்து சாம்பலானது. செப்டம்பர் 5 மாலை மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News September 6, 2025

பெரம்பலூர்: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

image

பெரம்பலூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04328-224744 அணுகலாம். SHARE பண்ணுங்க!

News September 6, 2025

பெரம்பலூர்: பெரியார் பட திறப்பு நிகழ்வு – நேரலை காணொலி

image

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கல்லைகழகல்த்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிலையில் அந்த காணொலி பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரையில் நேரலை காணொலி நடைபெற்றது. இந்த காணொலியை சட்ட மன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் மற்றும் கழக நிர்வாகிகள் கண்டு களித்தனர்.

News September 5, 2025

பெரம்பலூர்: தேர்வு இல்லை – அரசு வேலை!

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>>, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!