News January 30, 2026
பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று (ஜன.30) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மிருணாளினி தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகளின் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
பெரம்பலுர்: மர்ம ஆசாமியை பிடித்த பெண்

குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட மூலக்காடு கிராமத்தை சேர்ந்த திலகவதி (32), திலகவதியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, திலகவதியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் திலகவதி சங்கிலியை பிடித்து கொண்டும், திருடன் என்று கூச்சலிட்டார். அப்பகுதி மக்கள் உதவியுடன் மர்ம ஆசாமியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திலகவதியின் செயல்பாட்டினை எஸ்பி பாராட்டினார்.
News January 30, 2026
பெரம்பலுர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

பெரம்பலுர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <
News January 30, 2026
பெரம்பலுர்: மின்தடை அறிவிப்பு

குன்னம், வெண்மணி துணைமின் நிலையத்தில் இன்று (ஜன 30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், குன்னம், கல்லம்புதூர், அந்தூர், வரகூர் பெரியவெண்மணி, நல்லறிக்கை, புதுக்குடிசை, மேலமாத்தூர், கீழமாத்தூர், கொத்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில், காலை 9.30 மணியிலிருந்து பராமரிப்பு பணிகள் முடியும் வரை, மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் இ.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


