News September 10, 2025
பெரம்பலூரில் விஜய்? எப்போது தெரியுமா?

பெரம்பலூர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற பெயரில் தொடங்க உள்ளார். அதன்படி வரும் செப்டம்பர் 13.09.2025 தேதி பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து பொதுமக்களை சந்திக்க உள்ளார் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிகாரபூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. SHARE IT
Similar News
News September 10, 2025
பெரம்பலூர்: அமைச்சர் வேண்டுகோள்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில், மாநில அளவிலான அடைவுத்தோ்வு 2025 குறித்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்: மாணவர்களின் கற்றலை ஆசிரியர் மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.
News September 10, 2025
பெரம்பலூரில் இன்று மின்தடை அறிவிப்பு

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெற உள்ளதால் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம் உட்பட நகர பகுதி முழுவதும் சிட்கோ ,காவலர் குடியிருப்பு, இந்திரா நகர், அருமடல், அருமடல் பிரிவு, எளம்பலூர், மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு இன்று புதன்கிழமை காலை 9:45 மணி முதல் மின்விநியோகம் நிறுத்தப்படும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
News September 10, 2025
பெரம்பலூர்: இலவச வீட்டு மனை பட்டா!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி 12 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பயனடைந்த திருநங்கைகள் தங்களுது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.