News May 14, 2024
பெரம்பலூரில் வாகன பரிசோதனை

பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் இன்று காலை 10- மணியளவில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
பெரம்பலூர்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. குறைந்தது 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும்.
News July 10, 2025
பெரம்பலூர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை VAO-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் VAO யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க
News July 10, 2025
குடும்ப அட்டைகள் சம்பந்தமான சிறப்பு முகாம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் பெரம்பலூர் வட்டம் அரணாரை, வேப்பந்தட்டை வட்டம் தழுதாழை, குன்னம் வட்டம் புது வேட்டைகுடி, ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் ஆகிய கிராமங்களில் வரும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெற உள்ளது. இந்த முகாமில் மக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.