News April 5, 2025
பெரம்பலூரில் மின்நுகர்வோர் சிறப்பு முகாம்

பெரம்பலூரில் இன்று (ஏப்.05) மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. காலை 11 முதல் மாலை 5 வரை நடைபெறும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு மின் கட்டணம், பழுதான மின்னளவி மாற்றுவது, குறைந்த மின்னழுத்தம் தொடர்பான புகார்களை நேரடியாக தெரிவிக்கலாம் என பெரம்பலூர் மின் பகிர்மானவட்ட மேற்பார்வை பொறியாளர் மேகலா தெரிவித்துள்ளார். இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் SHARE செய்ங்க.
Similar News
News July 7, 2025
பெரம்பலூரில் இன்று மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் வாராந்திரம் திங்களன்று பொதுமக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதைத் தொடர்ந்து இன்று ( 07-07-2025 ) திங்கட்கிழமையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க!
News July 7, 2025
பெரம்பலூர் திமுக ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் j.k.தனியார் மஹாலில் பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதி கழக பாக நிலை முகவர்கள் (BLA2) மற்றும் BDA ஆலோசனைக் கூட்டம் இன்று தமிழ்நாடு கழக முதன்மைச் செயலாளரும் மண்டல பொறுப்பாளர் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் முன்னிலையில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் மாவட்ட திமுக கழக பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News July 6, 2025
பெரம்பலூர்: இந்த எண்களை மிஸ் பண்ணாதிங்க

பெரம்பலூர் பொதுமக்களின் அவசர உதவிக்கான தொலைப்பேசி எண்கள்:
▶️மாவட்ட பேரிடர் உதவி மையம் – 1077
▶️பொது விநியோக திட்டம் – 1967
▶️குழந்தைகள் உதவி மையம் – 1098
▶️பாலியல் வன்கொடுமை – 181
▶️விபத்து உதவி மையம் – 1073
▶️டெங்கு காய்ச்சல் உதவி எண் – 1077
உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்தவும்.