News November 5, 2025
பெரம்பலூரில் போலி மருத்துவர் கைது!

எளம்பலூர் சாலையில் உள்ள உப்பு ஓடை பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (52). இவர் போலியாக மருத்துவம் பார்ப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சுகாதாரத்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் அக்குபஞ்சர், நேச்சுரோபதி, ஹோமியோபதி போன்ற பட்டய படிப்பு படித்துவிட்டு, ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலி மருத்துவர் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News November 5, 2025
பெரம்பலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், 12 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
பெரம்பலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராம நத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் VAO-விடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்புத் திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். மற்றவர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க…
News November 5, 2025
பெரம்பலூர்: மினி பஸ்கள் இயக்க வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் மினி பஸ்கள் இயக்க, 2 புதிய வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் 3, 2025 அன்று அரசிதழில் வெளியான இந்த வழித்தடங்களில், பேருந்துகளை இயக்க விரும்புவோர் நவம்பர் 7-ம் தேதிக்குள் பரிவாகன் இணையதளம் வழியாக ரூ.1500 கட்டணம் மற்றும் ரூ.100 சேவை கட்டணம் என மொத்தம் ரூ.1600 செலுத்தி பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


