News January 23, 2026

பெரம்பலூரில் கன மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வரும் 25-ம் தேதி 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வரும் 25-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 24, 2026

பெரம்பலூர்: செயல்பாட்டுக்கு வந்த புதிய திட்டம்!

image

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நாகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களால் நடத்தப்படக்கூடிய வகையில் சிறுதானிய உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நேற்று (23.01.2026) மாவட்ட ஆட்சியர் மிருநாளினி திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் மகளிர் சுய உதவிக் குழு மேம்பட இந்த உணவகம் ஒரு உதவியாக இருக்கும் என ஆட்சியர் தெரிவித்தார்.

News January 24, 2026

பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் !

image

1.ஆதனூர் கைலாசநாதர் கோயில்
2.அணைபாடி ஆதீஸ்வரர் கோயில்
3.அயிலூர் குடிக்காடு சிவன் கோயில்
4.அயினாபுரம் மகாலிங்கம் கோயில்
5.கூடலூர் திருநாகேஸ்வரர் கோயில்
6.இலுப்பைக்குடி விஸ்வநாதர் கோயில்
7.இருர் சுந்தரேஸ்வரர் கோயில்
8.கல்பாடி ஆதித்தந்தோன்றீஸ்வரர் கோயில்
9.காரை விஸ்வநாதர் கோயில்
ஆன்மீக சுற்றுலா செல்லும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்க !

News January 24, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிரை வண்ணார் மக்களுக்கு அத்தியாவசிய அடையாள ஆவணங்கள் (ம) சட்டப்பூர்வ ஆவணங்களை வழங்குதல் தொடர்பாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. அதன்படி ஜன.28 பெரம்பலூர், குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்திலும்; ஜன.29 வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!