News April 29, 2025
பெரம்பலூரில் உழைப்பாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம்

பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய 4 ஒன்றியங்களில் 121 கிராம ஊராட்சிகளளில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஷ் பஞ்சால் உத்தரவின்படி உழைப்பாளர் தினமான (மே.01) அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது, கிராம சபையில் ஊராட்சி கிராம மக்களின் குறைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட உள்ளது. பெரம்பலூர் மக்களே கிராம சபை கூட்டம் மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
Similar News
News August 16, 2025
பெரம்பலூர்: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி வேண்டுமா?

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற <
News August 16, 2025
பெரம்பலூர்: கல்லூரி மாணவருக்கு ஆட்சியர் உதவி

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த பிரபாவதி என்பவர் தனது மகன் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் நிலையில் தனது கணவர் இறந்துவிட்டதால் குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர இயலாத நிலை என்றும், கல்விக்கட்டணம் கட்ட உதவிடும்படி கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையினை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், மாணவன் சஞ்சய்க்கு தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.55,000 வழங்கினார்.
News August 16, 2025
கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது

பெரம்பலூர் நகரப் பகுதியில் சிவன் கோயில் அருகில் ஆட்டோ டிரைவர் ரவி என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் வழிமறித்து, அருவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். ஆபத்தான நிலையில் ரவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தில் ஈடுபட்ட கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.