News October 23, 2024
பெரம்பலுாரில் கொம்பு இழந்த மானால் பரபரப்பு

செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர், நேற்று வீட்டில் இருந்தபோது, கொம்புகள் அறுக்கப்பட்ட நிலையில் மான் ஒன்று இவரது வீட்டிற்குள் புகுந்து பதுங்கியுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அவர் அதை பிடித்து பத்திரமாக கட்டி வைத்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம அளவில் கொம்புகளின்றி காயமடைந்திருந்த மானை, வனத்துறையினர் சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 6, 2026
பெரம்பலூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

பெரம்பலூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <
News February 6, 2026
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூரில் 10வது புத்தகத் திருவிழா 27.02.2026 முதல் 08.03.2026 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். மாவட்டம் தோறும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகமும், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றமும் இணைந்து புதிய பேருந்து நிலையம் அருகில் புத்தகத் திருவிழா நடத்தவுள்ளனர். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 6, 2026
பெரம்பலூர்: வேலைவாய்ப்பு – கலெக்டர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள 9 வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாத ஊதியம் ரூ.12,000/-வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக வந்து 16.02.2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.


