News May 17, 2024
பென்னாகரம்: ஸ்ரீ அங்காளம்மனுக்கு மண்டல பூஜை

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கருங்கல்மேடு பகுதியில் ஸ்ரீ அங்காளம்மன் மண்டல பூஜை நேற்று(மே 16) வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ அங்காள அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிடா வெட்டி பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Similar News
News December 23, 2025
தர்மபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News December 23, 2025
தர்மபுரி: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம்.(SHARE)
News December 23, 2025
தருமபுரி: மலிவு விலையில் கார் வேண்டுமா..?

தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, உதவி செயற்பொறியாளரின் பயன்பாட்டில் இருந்த ஈப்பு TN 09 G 1289 முதிர்ந்த நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு வரும் டிச.29ஆம் தேதி அன்று முற்பகல் 11 மணியளவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் நடைபெறுகிறது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


