News April 9, 2025
பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை

வேலூர் அரசு உதவி பெறும் (ஊரிஸ்) தனியார் கல்லூரியில், பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகாரில், தனியார் கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் நேற்று (ஏப்ரல் 8) கைது செய்யப்பட்டார். வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் விரிவுரையாளர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த அவர், ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.
Similar News
News April 17, 2025
வியப்பை உண்டாக்கும் வேலூர் குவளைகள்

வேலூர் அருகே கரிகிரி கிராமத்தில் சீன களிமண்ணால் தயார் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் நவாப்களால் பயன்படுத்தபட்டுள்ளன. அதில் குவளையின் உள்ளே ஊற்றப்படும் நீர் திரும்ப மேல் வழியாக வராமல், நீர் ஊற்றும் துவாரத்தின் வழி மட்டுமே வரும் வகையில் மேஜிக் குவளைகள் நவாப்களின் பாதுகாப்பிற்கென பயன்படுத்தப்பட்டுள்ளன. தனித்துவமான கரிகிரி மட்பாண்டங்கள் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
News April 17, 2025
வேலை தேடும் வேலூர் இளைஞர்கள் கவனத்திற்கு

வேலை தேடும் இளைஞர்களுக்கு முதல் சவாலே எங்கு வேலை உள்ளது என்பதை தெரிந்து கொள்வது தான். வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்ட வாரியாக தனியார் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை அறிந்து கொள்ள முடியும். வேலை தேடும் உங்க நண்பருக்கு ஷேர் பண்ணி ஹெல்ப் பண்ணுங்க
News April 17, 2025
அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

வேலூரில், 379 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <