News June 18, 2024
பெண் போலீஸ் மீது வெறிச்செயல்; கணவர் தலைமறைவு

காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பெண் காவலரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லிராணி – மேகநாதன் தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் டில்லிராணியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு, அவரது கணவர் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக, தலைமறைவான மேகநாதனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Similar News
News September 9, 2025
துணை முதலமைச்சருக்கு சால்வை அணிவித்த காஞ்சி எம்எல்ஏ

காஞ்சிபுரம், செவிலிமேடு அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு தமிழ்நாடு மாநில துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள இன்று (செப்.,9) வருகை தந்தார். துணை முதலமைச்சரை காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
News September 9, 2025
காஞ்சியில் திமுக நிர்வாகிகளை சந்திக்கும் துணை முதல்வர்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக ஒன்றிய, நகர, கிளைக்கழக மற்றும் பாக முகவர்களை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் இன்று (செப்.,8) காஞ்சிபுரத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்குகிறார். இதனை தொடர்ந்து நாளை காலை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செல்கிறார்.
News September 9, 2025
BREAKING: காஞ்சிபுரம் டி.எஸ்.பி-யை விடுதலை செய்ய உத்தரவு!

காஞ்சி டி.எஸ்.பி சங்கர் கணேஷ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அவரை சிறையில் அடைக்க காஞ்சி மாவட்ட நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் அவரை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்.,9) உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான விசாரணைக்கும் தடை விதித்துள்ளது.