News September 17, 2024
பெண் போலீசை கத்தியால் வெட்ட முயன்ற ரவுடி கைது

விழுப்புரம் ஊரல்கரைமேடு பகுதியில் ஒருவர் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் நகர காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ, தனது குழுவினருடன் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது, அந்த நபர், பெண் கான்ஸ்டபிளை கத்தியால் வெட்ட முயன்றார். பின்னர், போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், விசாரணையில் அந்த நபர், பிரபல ரவுடி என்பது தெரியவந்தது.
Similar News
News August 14, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.14) கோட்டக்குப்பம் நகராட்சியில் முஸ்லிம் தொடக்கப்பள்ளி, வல்லம் வட்டாரத்தில் டேனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருவெண்ணைநல்லூர் வட்டாரத்தில் ராஜா மண்டபம், ஒலக்கூர் வட்டாரத்தில் ஆவணிப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி, கோலியனூர் வட்டாரத்தில் நன்னாடு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி, செஞ்சி வட்டாரத்தில் ந.பி.பெற்றான் அரசு உயர்நிலைப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது
News August 13, 2025
சுதந்திர தினம்: மாவட்ட ஆட்சியர் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர்களால் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கேட்டுகொண்டுள்ளார்.
News August 13, 2025
விசை தெளிப்பான் வழங்கிய ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம், கோவில்புரையூர் ஊராட்சியில் நடைபெற்றுவரும் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், வேளாண்மைத்துறை சார்பில், விவசாயிக்கு விசை தெளிப்பானை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று வழங்கினார். உடன் மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் தனலட்சுமி உட்பட பலர் உள்ளனர்.