News March 26, 2025
பெண் கொலை வழக்கு- எலெக்ட்ரீசியனுக்கு 5 ஆண்டு சிறை!

சேலம் அடுத்த வீராணம் சுக்கம்பட்டியைச் சேர்ந்த அமுதா (36) சாக்கடை கால்வாயில் குப்பைகளைக் கொட்டியுள்ளார். இது தொடர்பான தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் சிவக்குமார் அமுதாவை தாக்கியுள்ளார். இது படுகாயமடைந்த அமுதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் எலெக்ட்ரீசியனுக்கு ரூபாய் 2,000 அபராதமும், 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!
Similar News
News March 26, 2025
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு எப்போது?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம், தனது தொகுதிக்குட்பட்ட கோயில்களின் திருப்பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார். பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, “மேச்சேரி பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ரூ.4 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள் 90% நிறைவடைந்துள்ளது;வரும் ஜூலையில் குடமுழுக்கு நடத்தப்படும்” என்றார்.
News March 26, 2025
குழந்தை தொழிலாளர் முறையை நிறுத்த வேண்டும்

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வுகள் தினந்தோறும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சேலம் போலீசார் நேற்று ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் குழந்தை தொழிலாளர் முறையை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். மேலும், குழந்தைகளுக்குத் தேவையான கல்வியை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
News March 26, 2025
ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் குறித்த முக்கிய அறிவிப்பு

ஜோலார்பேட்டை-திருப்பத்தூர் மார்க்கத்தில் தண்டவாளம் மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக இம்மார்க்கத்தில் இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில், குறிப்பிட்ட நாட்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் (56108), வரும் 29, 30ம் தேதிகளில் ஈரோட்டில் இருந்து சேலம் வழியே திருப்பத்தூர் வரை மட்டும் இயக்கப்படுகிறது.