News August 28, 2025

பெண் குழந்தை இருக்கா? (2/2)

image

இத்திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் 1 பெண் குழந்தை (அ) 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். (SHARE)

Similar News

News August 28, 2025

வேலூர்: உதவியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

image

வேலூர் மாவட்டத்தை சார்ந்த படித்த இளைஞர்கள் தமிழ்நாடு – மாநில ஆள் சேர்ப்பு நிலையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தலைமை கூட்டுறவுச் சங்கங்களில் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் அதிக அளவில் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற்று பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஆக.28) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 28, 2025

வேலூர்: பெண் குழந்தை இருக்கா?

image

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ▶️ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. ▶️2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. ▶️இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். ▶️இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க (<<17541513>>தொடர்ச்சி) <<>>

News August 28, 2025

வேலூர் கலெக்டர் ஆய்வு

image

வேலூர், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், கரிகிரி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் 13 வீடுகளுக்கான கட்டுமான பணிகளை கலெக்டர் சுப்புலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் அருள், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!