News August 14, 2024
பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரத்தில் பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜன.24 ஆம் தேதி மாநில அரசின் விருதுடன் ரூ.1 லட்சம் வழங்கப்படும். இந்த விருதுக்கு நவ.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
காஞ்சிபுரத்தில் பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

காஞ்சிபுரம் பட்டதாரிகளே..தொழில் முனைய ஆர்வம் உள்ளவரா நீங்கள்? பணம் இல்லையே என கவலை வேண்டாம். தமிழக அரசால் உங்கள் ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க! மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
News September 18, 2025
காஞ்சிபுரம்: பட்டாவில் திருத்தம் செய்வது இனி ஈஸி!

காஞ்சி மக்களே! தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் & புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
காஞ்சிபுரம்: காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி!

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் & தீயணைப்பாளர் பணிகளுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயனடையும் வகையில் காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் வரும் செப்.,22 முதல் நடைபெறவுள்ளது. ஷேர் பண்ணுங்க!