News December 12, 2025

பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், விதிரா செல்ஃப்கேர் பிளஸ் திட்டத்தின் கீழ் 13 முதல் 18 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கான மாநில விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க https://awards.tn.gov.in மூலம் 20-12-2025க்குள் தனிச்சான்றுகள் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

Similar News

News December 13, 2025

கிருஷ்ணகிரி: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம்.( SHARE )

News December 13, 2025

கிருஷ்ணகிரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News December 13, 2025

கிருஷ்ணகிரி: சத்துணவு மையத்தில் 146 காலியிடங்கள்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., நமது மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சத்துணவு மையத்தில் காலியாக உள்ள 146 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க டிச.17ஆம் தேதியே கடைசி நாள். மேலும் விபரங்களைத் தெரிந்துகொள்ள, விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!