News August 7, 2024
பெண் குழந்தைகள் திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

சமூக நலத்துறையின் கீழ் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேனி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வைப்புத்தொகை ரசீது பெற்ற பயனாளிகளில் முதிர்வுத் தொகை கிடைக்க பெறாமல் உள்ள 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தை அனுகலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 20, 2025
தேனி: ரூ.1,50,000 மதிப்பிலான பன்றிகள் திருட்டு.!

கண்டமனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் அப்பகுதியில் பன்றி பண்ணை வைத்து நடத்தி வரக்கூடிய நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பண்ணையில் இருந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பிலான ஏழு பன்றிகளை சிலர் திருடி சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கண்டமனூர் போலீசார் நேற்று (அக்.19) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 20, 2025
கம்பத்தில் தொழில் நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை

கம்பம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (47). இவர் நகை பட்டறை வைத்து தொழில் செய்து வந்த நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொழில் நஷ்டம் காரணமாக மன வருத்தத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த நிலையில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு (அக்.19) பதிவு.
News October 20, 2025
தேனி மக்களே தீபவாளி கொண்டாட… இது முக்கியம்

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, மின்விளக்குகளால் தீ விபத்து அபாயம் அதிகம். உங்கள் பாதுகாப்பே முதல் முன்னுரிமை. தீயணைப்பு நிலையம் எண்கள்: போடி:04546-280299, கம்பம்:04554-271292, கடமலைகுண்டு:04554-227226, மயிலாடும்பாறை:04554-227258, பெரியகுளம்: 04546-231299, தேனி:04546-252699,ஆண்டிப்பட்டி:04546-242222, உத்தமபாளையம்: 04554-252699 மகிழ்ச்சியான தீபாவளிக்கு இந்த எண்கள் முக்கியம். SHARE பண்ணுங்க.