News October 17, 2025
பெண் காவலர்களுக்கு ஓய்வு அறையை திறந்து வைத்த எஸ்பி

அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஷ்வேஷ் இன்று (அக்.17) அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஓய்வு அறையை திறந்து வைத்தார். பணிபுரியும் பெண் அமைச்சு பணியாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் பணி இடைவெளி நேரத்தில் ஓய்வு எடுக்கவும், கர்ப்பிணிகளுக்கு, உடல்நிலை சரியில்லாதவர்கள் பயன்பெறு வகையிலும், மேலும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், புத்துணர்ச்சி பெறவும் குறிஞ்சி மகளிர் ஓய்வு அறை திறக்கப்பட்டது.
Similar News
News October 18, 2025
அரியலூர்: தீபாவளி ஆஃபர்-மக்களே உஷார்!

தீபாவளி பண்டிகையானது வரும் அக்.20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக தற்போது பொதுமக்கள் பலரும் ஆன்லைனில் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குகின்றனர். இதனை சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி, ஆஃபர் உள்ளதாக போலியான லிங்குகள் மூலமாக பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்கள் உஷாராக இருக்கும்படியும், ஏமாற்றப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
News October 18, 2025
அரியலூர்: குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலை கடைகளில் அக்டோபர் மாத அரிசியுடன் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை மட்டும் முன்கூட்டியே அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் மாதத்திற்கான கோதுமை, து.பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகிய உணவுப்பொருட்கள் வழக்கம்போல் நவம்பர் மாதம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
அரியலூர்: அழகு கலை பயிற்சி பெற அழைப்பு!

அரியலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு திறன் அடிப்படையில் ஓப்பனை, அழகுக்கலை மற்றும் TATTOO குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். SHARE IT NOW…