News November 17, 2024
பெண் உட்பட நான்கு பேருக்கு வெட்டு

ராணிப்பேட்டை அருகே ஆயல் நாகத்தாங்கலை சேர்ந்த சர்வேஷ் அப்பகுதியில் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். இது தொடர்பாக சிலர் அவரை தட்டி கேட்டுள்ளனர்.இந்நிலையில் இன்று சர்வேஷ், தம்பி சந்துரு, தந்தை சுரேஷ், பாட்டி கிருபாவதி ஆகியோரை ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல்தாக்கி கத்தியால் வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த 4 பேரும் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாணாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 12, 2025
ராணிப்பேட்டையில் நாளை மின் தடை

ராணிப்பேட்டையில் நகரம், ஆடோ நகர், வீ.சி.மோட்டூர் , ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிக்குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை(நவ.13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 12, 2025
அரக்கோணத்தில் போலி சான்றிதழ்!

ராணிப்பேட்டை: அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வாகும் ஆண், பெண் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான சர்ஜீத்(23) என்பவரய்து சான்றிதழ்களில் இருப்பிட சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 12, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


