News January 10, 2026
பெண்ணை கர்ப்பமாக்கினால் ₹10 லட்சம்.. SCAM ALERT

பிஹார் சைபர் பிரிவு போலீசார் ‘பெண்ணை கர்ப்பமாக்கினால் ₹10 லட்சம் சம்பாதிக்கலாம்’ என்ற சைபர் மோசடியை முறியடித்துள்ளனர். ‘All India Pregnant Job’ என்ற பெயரில், குழந்தை இல்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ₹10 லட்சம் வழங்கப்படும் என்றும், அதில் தோல்வியடைந்தால் பாதி பணம் வழங்கப்படும் என்றும் நம்ப வைத்து பணம் பறித்துள்ளனர். இந்த மோசடி குறித்த விசாரணையில், 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News January 27, 2026
ஜல்லிக்கட்டு வீரர் உயிரிழந்தால் ₹10 லட்சம்: EPS

நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை EPS தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழக்கும் வீரரின் குடும்பத்தினருக்கு ₹10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கெனவே சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என CM ஸ்டாலின் பொங்கலின்போது அறிவித்திருந்தார்.
News January 27, 2026
பாஜகவினர் மிரட்ட முயல்கிறார்கள்: அருண்ராஜ்

கரூர் விவகாரத்தை வைத்து <<18962231>>பாஜக <<>>மிரட்ட முயல்வதாக தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் சாடியுள்ளார். மேலும், அதிமுகவினரின் கடுமையான விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு, களத்தில் இல்லாதவர்களை பற்றிப் பேசப் போவதில்லை என பதிலளித்தார். விஜய் மீதான <<18964296>>TTV-யின் விமர்சனம் <<>>பற்றிய கேள்விக்கு, அவர் முன்னுக்குபின் முரணாக பேசுபவர் எனவும் சாடினார்.
News January 27, 2026
BREAKING: கூட்டணி முடிவை அறிவித்தார் கிருஷ்ணசாமி

கூட்டணி முடிவு குறித்து இதுவரை அறிவிக்காத புதிய தமிழகம் கட்சி தவெக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். வெறும் MLA ஆக வெற்றிபெறுவது மட்டும் தங்கள் நோக்கம் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.


