News December 1, 2024
பெண்ணை கத்தியால் குத்திய 2 பேர் கைது

தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராணி. இவருக்கும் இவர் பக்கத்து வீட்டில் வசித்த பொன்ராஜ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று செல்வராணி வீட்டுக்கு சென்ற பொன்ராஜும் அவரது நண்பர் யோகேஷ் குமாரும் செல்வராணியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இது சம்பந்தமாக தென்பாகம் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 10, 2025
தூத்துக்குடி: கட்டுமான தொழிலாளர்களுக்கு பயிற்சி

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வரும் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கூடுதல் தகவல்களை தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவியாளர் ஆனந்த் பிரகாஷிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
தூத்துக்குடி: வங்கி வேலைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இந்திய ரிசர்வ் வங்கியில்(RBI) கிரேடு B ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 120 காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள்<
News September 10, 2025
தூத்துக்குடியில் 21 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோர்ட்டு பயிற்சி முடித்த துணை தாசில்தார்கள் புதிய பணியிடங்களில் பணி நியமனம் செய்தும், நிர்வாக காரணங்களுக்காக துணை தாசில்தார்கள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 21 துணை தாசில்தார்களை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.