News April 16, 2025

பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த ஜோதிடர்கள் கைது

image

சிங்காரப்பேட்டை அடுத்த தளபதி நகர் சேர்ந்த சரிதா. இவரிடம் உங்களுக்கு நேரம் சரியில்லை என்று கூறி காரில் வந்த 2 ஜோதிடர்கள் அவர் காதில் அணிந்திருந்த நகை மற்றும் 5000 பணத்தை வைத்து பரிகாரம் செய்வதாக கூறி நகை பணத்துடன் தப்பி ஓடினர். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டம் செங்க்குட்டை பகுதியை சார்ந்த சரண், ஜீவா ஆகிய இருவரையும் கைது செய்தனர். பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.

Similar News

News January 9, 2026

ஓசூரில் பாஜக நிர்வாகி அதிரடி கைது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று (ஜன.09) ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ. 4.5 கோடி மோசடி செய்த புகாரில், ஓசூரில் பதுங்கி இருந்த பாஜகவின் மாநில மகளிரணி துணைத் தலைவி மதிவதனகிரி கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் ஓசூர் பதுங்கி இருந்த அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

கிருஷ்ணகிரி வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

கிருஷ்ணகிரி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

புதிய தொழிற்பள்ளிகள் துவங்க அழைப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2026-27 கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விரும்புவோர் பிப்ரவரி 28-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் கூடுதல் இடங்களுக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!