News December 21, 2025
பெண்கள் Safety-க்காக போனில் இத பண்ணுங்க!

➤Phone Settings-க்கு சென்று, Emergency SOS என தேடி அதை ON செய்யுங்கள் ➤நம்பகமானவர் (உறவினர்/நண்பர்) Contact-ஐ அதில் உள்ளிடுங்கள் ➤நீங்கள் ஏதேனும் பிரச்னையில் சிக்கும்போது Power button-ஐ 3 முறை அழுத்தினாலே போதும். உங்களுடைய Live Location போலீசுக்கும், உறவினருக்கும் சென்றுவிடும். பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News February 5, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 602
▶குறள்:
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
▶பொருள்: குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
News February 5, 2026
ஹிந்தி திணிப்பு கிருமியை கட்டுப்படுத்தணும்: கனிமொழி

சிவகாசி ரயில் நிலைய பெயர்ப்பலகையில், தமிழ் எழுத்துக்களை மாற்றி ஹிந்தியை இடம்பெறச் செய்தது சர்ச்சையாகியுள்ளது. தனது X பதிவில் கனிமொழி, சென்னை பூங்கா ரயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் ஹிந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதாக சாடியுள்ளார். மேலும், நோய்த்தொற்றை போல ஊரெங்கும் பரவிடும் ஹிந்தி திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News February 5, 2026
திமுக அரசின் ₹700 கோடி ஊழல்: அன்புமணி

திருவான்மியூர்-உத்தரண்டி 4 வழி உயர்மட்ட சாலை ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். ₹2,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஐதராபாத் நிறுவனத்திற்கு DMK அரசு வழங்கியதாகவும், ஆனால் ₹700 கோடி குறைவாக கோரப்பட்ட ஒப்பந்தபுள்ளியை திட்டமிட்டு நிராகரித்துள்ளனர் எனவும் சாடியுள்ளார். இதன் பின்னணியில் ஊழல் நடந்திருப்பதை யூகிக்க முடிவதால், CBI விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.


