News January 22, 2026
பெண்கள் விரோத திமுக அரசை தூக்கியெறிவோம்: அன்புமணி

தமிழகத்தில் திமுக ஆட்சியை எதிர்த்து பல்வேறு இடங்களில் அன்றாடம் போராட்டம் நடைபெற்று வருவதாக அன்புமணி விமர்சித்துள்ளார். அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளதாகவும், பெண்கள் விரோத திமுக அரசு வரும் தேர்தலில் தூக்கியெறியப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரம் உள்ளதாகவும், அதனால் கொடூர கொலைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 29, 2026
இனி தலைக்கு குளித்த பிறகு இந்த தப்ப பண்ணாதீங்க..

தலைக்கு குளித்த பிறகு டவல் கட்டும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? இப்படி செய்வதால் அதிகமாக முடி உதிரும் என டாக்டர்கள் சொல்கின்றனர். தலைமுடி ஈரமாக இருக்கும்போது வேர்க்கால்கள் வலுவிழந்து இருக்கும். இந்த சமயத்தில் வெயிட்டான டவலை கட்டினால் முடி வேரோடு உதிரும். எனவே இதனை செய்யாமல் முடிக்கு மெதுவாக ஒற்றியெடுங்கள் போதும். முடியை உலர்த்த வெயிலில் நிற்பதும் சிறந்தது. SHARE.
News January 29, 2026
தமிழக தேர்தல் தேதி விரைவில் வெளியாகிறது!

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி மார்ச் முதல் (அ) 2-வது வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தமிழகம், கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்து பிப்.4, 5-ல் ஆலோசனை நடத்துவதாக ECI அறிவித்துள்ளது. இதில் பங்கேற்குமாறு, தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்றவுள்ள IAS, IPS, உள்துறை செயலர்கள் ஆகியோருக்கும் ECI அழைப்பு விடுத்துள்ளது.
News January 29, 2026
மகா., DCM ஆகிறாரா அஜித் பவார் மனைவி?

அஜித் பவார் மறைவைத் தொடர்ந்து அவரது மனைவி சுனேத்ரா பவாரை மகாராஷ்டிர DCM-ஆக நியமிக்க NCP திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்கெனவே அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அஜித் பவாரின் மறைவால் காலியாக உள்ள பாராமதி தொகுதியில் அவரது மனைவி போட்டியிட வாய்ப்புள்ளது. மேலும், கட்சித் தலைவராக பிரஃபுல் படேல் பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.


