News July 8, 2025
பெண்கள் சேவை மையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ஆத்தூர் சகி பெண்கள் சேவை மையத்தில் வேலைக்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள நபர்கள் 15.07.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம். அறை எண் 126 என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0427-2413213 அழைக்கவும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.SHAREit
Similar News
News November 13, 2025
இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு!

சேலம் மாவட்டத்தில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு நவம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளதாகவும் சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 4,646 பேர் தேர்வு எழுத உள்ளதாகவும் 104 மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்பார்கள் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News November 13, 2025
சேலம்: ஆதிதிராவிடர் பழங்குடி இளைஞர்களுக்கு பயிற்சி

ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கிகரிக்கப்பட நிறுவனம் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலை வாய்ப்பை உத்தரவாதப்படுத்த தாட்கோ மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 23 வயதிற்குட்பட்டவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது கல்லூரி தேர்ச்சி பெற்றவர்கள் www.tahdco.com பதிவு பெற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், வெளிநாட்டில் கல்வி கற்க உதவி புரியும் எனவும் 18 முதல் 35 வயது உடையவர்கள் பங்கேற்கலாம் எனவும் செலவுகளை தாட்கோ நிறுவனம் ஏற்கும் எனவும் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.


