News January 25, 2025

’பெண்கள் சேவை மையத்தில் தற்காலிக பணி’

image

சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி ஆகியவற்றை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ’சகி பெண்கள் ஒருங்கிணைந்து சேவை மையம்’ செய்து வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0427 2413213 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். இதை தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்யூங்கள்.

Similar News

News July 9, 2025

பொது வேலைநிறுத்தம்- ஷேர் ஆட்டோக்கள் இயங்கவில்லை

image

மத்திய அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூலை 09) தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஷேர் ஆட்டோக்கள் இயங்காததால் பேருந்து பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

News July 9, 2025

சேலம்-திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

ஆனி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் இன்று (ஜூலை 09) முதல் ஜூலை 11- ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சேலம் மத்திய பேருந்து நிலையம், ஆத்தூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து பயணிகளின் எண்ணிக்கை, தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 9, 2025

உயிரிழப்பை ஏற்படுத்திய 255 ஓட்டுநர்களின் லைசென்ஸ் ரத்து!

image

சேலம் சரகத்தில் வாகன விபத்துக்களைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தருமபுரியில் கடந்த 6 மாதங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 255 பேரின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!