News January 23, 2026
பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!

*திருமணமாகாத பெண்களும் குழந்தையை தத்தெடுக்கலாம். *நிறுவனங்கள் 26 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய கட்டாய மகப்பேறு விடுமுறையை வழங்க வேண்டும். *யாரேனும் Stalking செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறை. *பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானால், உடனடி இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம். *மாஜிஸ்திரேட் அனுமதி இல்லாமல், ஒரு பெண்ணை இரவிலோ, அதிகாலையிலோ கைது செய்ய முடியாது. *ஒரு ஆண் போலீஸ், ஒரு பெண்ணை உடல்ரீதியாக பரிசோதிக்க கூடாது.
Similar News
News February 2, 2026
போர் வெடிக்கும்.. டிரம்புக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை அனுப்பப்படுவதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது பிராந்திய போராக மாறும் என சுப்ரீம் லீடர் கொமேனி எச்சரித்துள்ளார். தாங்கள் போரை விரும்பவில்லை என்றாலும், தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் எனக் கூறியுள்ளார். மேலும், ஈரானின் எண்ணெய் & இயற்கை எரிவாயு வளங்களை கைப்பற்ற அமெரிக்கா முயல்வதாகவும் சாடியுள்ளார்.
News February 2, 2026
தேர்தல் ரிசல்ட் பாஜகவுக்கு தெரியும்: ஜோதிமணி MP

மத்திய பட்ஜெட் முற்றிலும் தமிழகத்திற்கு ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக ஜோதிமணி MP கூறியுள்ளார். தேர்தலில் தோற்றுவிடுவோம் எனத் தெரிந்து தான் தமிழகத்திற்கு எவ்வித நலத்திட்டங்களையும் பாஜக அரசு அறிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் TN எதிர்பார்த்த மெட்ரோ ரயில், விமான நிலைய விரிவாக்கம், குடிநீர் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News February 2, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 599 ▶குறள்: பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
▶பொருள்: யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.


