News July 6, 2025
பெண்களை செல்போனில் படம் பிடித்தவருக்கு தர்மஅடி

சேலம், தாதகாப்பட்டி உழவர் சந்தையில் நேற்று காலை காய்கறிகள் வாங்க வந்த பெண்களை, சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செல்போனில் ரகசியமாக படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார், அந்த நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 6, 2025
கோயில் பிரசாதம் சாப்பிட்ட 20 பேர் அட்மிட்

சேலம்: கிச்சிப்பாளையம், எஸ்.எம்.சி., காலனி அருகே சந்து மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு அங்கு நேற்று இரவு, 7:30 மணிக்கு பூஜை முடிந்த பின், தக்காளி சாதம், சுண்டல் பிரசா தமாக வழங்கப்பட்டன. அதை சாப்பிட்ட, 20க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுபோக்கு, வாந்தி, மயக்கம் ஏற்படவே உடனே அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப் பட்டனர். கிச்சிப் பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News July 6, 2025
இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள்<
News July 6, 2025
சொந்த ஊரில் அரசு வங்கியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக உள்ள 5208 ப்ரோபேஷனரி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் <