News March 30, 2025

பெண்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் வினோத கிராமம்

image

மதுரையை டி.கல்லுப்பட்டி அருகே கூவலப்புரம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு பெண்கள் மாதவிலக்கு காலங்களில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்படும் அவலம் இன்றளவும் தொடர்கிறது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு அறையில் பெண்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். பெண்கள் பல்வேறு தடைகளை தாண்டி தடம் பதிக்கும் நவீன உலகில் தொடரும் இந்த நடைமுறை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

Similar News

News February 8, 2026

மதுரை: கார் மோதியதில் ஒருவர் பலி

image

கள்ளந்திரி அருகே பொய்கை கரைபட்டியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி கருப்பாயி(64). இவர் நேற்று முந்தினம் மாலை அழகர் கோவில் ரோட்டில் நடந்து சென்ற போது, தாய் ஓட்டல் எதிரே அதி வேகமாக வந்த கார் இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கார் டிரைவரை கைது செய்தனர்.

News February 7, 2026

மதுரையில் FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
மதுரை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0452 2527355
தமிழ்நாடு அவசர உதவி: 04575-242561
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 7, 2026

மதுரை அருகே 9ம் வகுப்பு மாணவி பலி

image

நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராமகண்ணன் மகள் விஜய்ஸ்ரீ(13), சிறுமலர் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இச் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரால் கண்களை மூட முடியவில்லை. உடல் முழுவதும் சிராய்ப்பு மற்றும் நீல நிறமாக இருந்தது. மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!