News December 21, 2025

பெண்களே ஆபத்தா? 181 அழையுங்கள்!

image

ம்: சேலம் மாவட்ட காவல்துறையின் சட்ட ஒழுங்குப் பிரிவு சார்பில் பெண்கள் பாதுகாப்பிற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பெண்களுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது இன்னல்கள் ஏற்பட்டால், உடனடியாக உதவி பெற ‘181’ என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாகக் காவல்துறை பாதுகாப்பு மற்றும் உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 21, 2025

சேலம்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

image

சேலம் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க<> CLICK HERE<<>>.
வேலை தேடும் ஏழை இளைஞன் யாருக்காவது உதவும் இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க!

News December 21, 2025

சேலம் அருகே விபத்து: ஒருவர் பலி!

image

சேலம் ஜான்சன் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன், 53. இவர் டூவீலரில் ராஜா நகர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தாமரைச்செல்வன் படுகாயம் அடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 21, 2025

தாரமங்கலம் அருகே சோகம்: இளம்பெண் விபரீத முடிவு

image

தாரமங்கலம் அருகே பாப்பம்பாடி பகுதியில் சரபங்கா நதியில் நேற்று கோகுலபிரியா (21) என்ற இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில் உடலை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பெற்றோர் காதலை எதிர்த்ததால் மனமுடைந்த அவர் நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!