News December 21, 2025
பெண்களுக்கு ₹1,200 தரும் அரசு திட்டம்!

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய உதவித்தொகை திட்டம் மூலம் கணவனை இழந்து வாடும் பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,200 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் பெண்களின் வயது 60-க்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது. கிராம பஞ்சாயத்து (அ) மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பியுங்கள். UMANG ஆப் மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். SHARE.
Similar News
News December 22, 2025
புத்தாண்டு கொண்டாட்டத்தில் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு

எழும்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் 2025 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குழந்தைகள் அழைத்துவரப்பட்டதாக புகார் மனு ஒன்று சென்னை HC-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், புத்தாண்டில் மது அருந்தும் இடத்துக்கு குழந்தைகளை அழைத்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதுபோன்று புகார் வந்தால் அரசு உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
News December 22, 2025
உன் மேல ஒரு கண்ணு கீர்த்தி சுரேஷ்

தனது கியூட்டான முக பாவனைகள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த கீர்த்தி சுரேஷ், தனது லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதில், கருப்பு உடையில் அவரது போஸ், மனதில் அடைமழை பொழிகிறது. அவரது சிரிப்பு, மலர் குடையாய், பகல் நிலவாய் நெஞ்சில் தீயை மூட்டுகிறது. கண் மூடும்போது, கண் முன்னே அழகாய் ஒளிர்கிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தால் ஒரு லைக் போடுங்க.
News December 22, 2025
மகளிர் உரிமைத்தொகையை உயர்த்த திமுக திட்டம்!

மகளிர் உரிமைத்தொகை உயரும் என CM ஸ்டாலின் அண்மையில் கூறியிருந்தார். <<18640200>>கனிமொழி தலைமையில்<<>> திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் வழங்கப்படும் ₹1,000 உரிமைத்தொகையை ₹1,500 ஆக உயர்த்தலாம் என பேசப்பட்டதாக தெரிகிறது. 2021 தேர்தலின்போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ₹1,500 இடம் பெற்றிருந்தது.


