News November 6, 2025
பெண்களுக்கு ₹1,200 தரும் அரசு திட்டம்!

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதிய உதவித்தொகை திட்டம் மூலம் கணவனை இழந்து வாடும் பெண்களுக்கு மாதந்தோறும் ₹1,200 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்களின் வயது 60-க்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ₹1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது. கிராம பஞ்சாயத்து (அ) மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பியுங்கள். பல பெண்களுக்கு பயனுள்ள இத்தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News February 18, 2026
வங்கக்கடலில் புயல் சின்னம்: கனமழை அலர்ட்!

தெற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம், கேரளா, புதுச்சேரியில் வரும் 23-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை இருக்கும் என்பதால் மக்கள் அலர்ட்டா இருங்க.
News February 18, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹5,000.. கணவர் தற்கொலை!

மனைவிக்கு தெரியாமல் சிறப்பு நிதியுதவி ₹5,000-ஐ செலவு செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர், நெடுங்குளத்தை சேர்ந்த ஈஸ்வரன், மனைவி ராமுவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்ற, மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். எனவே, மனமுடைந்த ஈஸ்வரன் இம்முடிவை எடுத்துள்ளார்.
News February 18, 2026
ஈஷா மையத்தில் பேச்சுவார்த்தையா? பிரேமலதா

ஈஷா மையத்தில் L முருகன், SP வேலுமணி உடன் பிரேமலதா பங்கேற்றது, NDA கூட்டணியில் இணைவதற்கான சமிக்ஞையே என அரசியல் நோக்கர்கள் கூறினர். இந்நிலையில், இந்த நிகழ்வில் யாருடனும் அரசியல் ஏதும் பேசவில்லை என்று பிரேமலதா விளக்கமளித்துள்ளார். மேலும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், தேமுதிகவில் விருப்ப மனு பெற்றவர்களிடம், பிப்.20-ல் நேர்காணல் தொடங்குகிறது.


