News April 8, 2025
பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி

சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகில் உள்ள ஆர்.ஆர்.திருமண மண்டபத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியின் கால அளவு 30 நாட்கள்; தேநீர், உணவு மற்றும் பயிற்சி உபகரணங்களுடன் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி ஏப்.09 ஆகும். மேலும் – தொடர்புக்கு 75503-69295, 95666-29044 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 14, 2025
சேலம்: B.E./B.Tech போதும் ரூ.1.60 லட்சம் சம்பளம்!

சேலம் மக்களே, Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News September 14, 2025
சேலம்: கருவில் பாலினம் கண்டறிந்து தெரிவிக்க வசூல்!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்துத் தெரிவித்ததாக அரசு மருத்துவமனை டாக்டர்.தியாகராஜன் மற்றும் புரோக்கர் ஸ்ரீராம் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த போலீசார் பாலினம் கண்டறிந்து தெரிவிக்க ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை வசூல் செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
News September 14, 2025
சேலத்தில் பட்டாசு கடை வைக்க விண்ணப்பிப்பது எப்படி?

சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசுக் கடைகளை அமைக்க விரும்பும் வியாபாரிகள், வருகிற அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படம்,அடையாள அட்டை,வருமான வரி, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் அல்லது அனைத்து பொது இ-சேவை மையங்களிலும் விண்ணப்பம் செய்யலாம்.