News December 29, 2024

பெட்டி கடையில் புகையிலை விற்ற பெண் கைது

image

ஈரோடு, மாதவகிருஷ்ணா வீதியில், ஈரோடு நகர காவல் ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள ஒரு பெட்டி கடையில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கடைக்காரரான ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்த சுந்தரத்தின் மனைவி சாந்தியை (50), போலீசார் கைது செய்தனர்.

Similar News

News March 6, 2026

ஈரோட்டில் உயிர் காக்கும் முக்கிய வாட்ஸ்அப் எண்!

image

ஈரோடு மக்களே விபத்து காலங்களில் அவசர சிகிச்சைக்காக ‘108’ ஆம்புலன்ஸை அழைப்பதில் ஏற்படும் முகவரி சிக்கல்களைத் தவிர்க்க, தமிழக சுகாதாரத் துறை 94450 30725 என்ற புதிய வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விபத்து நிகழ்ந்த இடத்தின் (Location) தகவலைத் துல்லியமாகப் பகிர்ந்து, ஆம்புலன்ஸ் சேவையை விரைவாகப் பெற முடியும். மனித உயிர்களைக் காக்கும் இந்த மிக முக்கியமான தகவலை SHARE பண்ணுங்க!

News March 6, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! GOOD NEWS

image

ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் லிட்டருக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார். அரசு வழங்கும் ரூ.3 உடன் ஆவின் சார்பில் ரூ.2 கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும், காப்பீடு, மருத்துவ வசதி மற்றும் கடன் போன்ற சலுகைகளைப் பயன்படுத்தி உற்பத்தியாளர்கள் அதிக அளவில் பால் வழங்கிப் பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 6, 2026

சட்டமன்றத் தேர்தல் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதையொட்டி, கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

error: Content is protected !!