News March 22, 2025

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.77¾ கோடி 

image

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.77% கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 49 ஆயிரத்து 850 பேருக்கு ரூ.34 கோடி அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 33 சதவீததிற்கும் அதிகமான வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Similar News

News August 9, 2025

தி.மலை: உங்க போனுக்கு தேவை இல்லாத மெசேஜ் வருதா?

image

தி.மலை மாவட்ட மக்களே உங்கள் செல்போனுக்கு பரிசு தொகை விழுந்துள்ளதாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். தங்களிடமிருந்து பணம் பறிக்கும் புதிய மோசடியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு தேவையில்லாத குறுஞ்செய்தி உங்கள் போனுக்கு வருகிறதா? உடனே சைபர் கிரைம் உதவி எண்: 1930க்கு அழைக்கவும். அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து புகாரளிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

மாவட்ட அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம்

image

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளகத்தில் பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா மாவட்ட அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இம்முகாமிற்கு வரும் பயிற்சியாளர்கள் www.apprenticeshipinida.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தர்பாக ராஜ் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

தி.மலை: கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலை

image

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காலியாக உள்ள 2,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை சம்பளம் வழங்கப்படும். டிகிரி முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரும் ஆக.29ஆம் தேதிக்குள் <>இந்த இணையத்தளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடைபெறும். சூப்பர் வாய்ப்பு, டிகிரி முடித்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!