News February 10, 2025
பெங்களூர் இளைஞர் கடலில் மூழ்கி மாயம்

கர்நாடக மாநிலம், பெங்களூரு ராஜிகுட்டா, ஜே.பி.நகர், விவேகானந்தர் காலனியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். பெயிண்டரான இவர், தனது நண்பர்கள் 5 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றார். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கடற்கரையில் நண்பர்களுடன் குளித்தபோது அரிக்கிருஷ்ணன் கடல் அலையில் சிக்கி மாயமானார். இந்த நிலையில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று மார்ச்-(06) இரவு 10 மணி முதல் மார்ச்- (07)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறந்த ஆட்சியர்

விழுப்புரம் நகராட்சி சாலமேடு பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இன்று (மார்ச்.06) திறக்கப்பட்டது. இந்த விழாவில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான்,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணன் முன்னிலையில் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு பங்கேற்றனர்.