News March 30, 2025

பெங்களூரில் மத்திய அரசு BHEL நிறுவனத்தில் வேலை

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரிக்கல் நிறுவத்தின் (BHEL) பெங்களூர் பிரிவில் காலியாக உள்ள 33 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 01.03.2025 தேதியின்படி 32 வயது வரை இருக்கலாம். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் முடித்திருக்க வேண்டும். ரூ.45,000- ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து வரும் ஏப்ரல் 16க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News April 2, 2025

ஆம்பூர் பிரியாணியின் ருசிக்கு காரணம் என்ன?

image

தமிழ்நாட்டில் பிரியாணிக்கென உள்ள தனித்துவமான ஸ்பாட்டுகளில் முக்கியமான ஊர் ஆம்பூர் பிரியாணி.தொடக்கத்தில் நவாப் படைவீரர்களுக்கு உணவளிக்க சமைக்கப்பட்ட பிரியாணி இன்று பலரின் விருப்ப உணவாக உள்ளது. ஹைதராபாத் பிரியாணி போன்றே நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் கூடுதலாக தக்காளியும், சிறிதளவு மஞ்சளும் சேர்க்கப்பட்டு சற்றே செம்மஞ்சளாக இருப்பது கண்களுக்கு ஒருவிதமான ஈர்ப்பை தருகிறது.ஷேர் பண்ணுங்க

News April 2, 2025

CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி. <>ஷேர் பண்ணுங்க<<>>

News April 2, 2025

பிரபலமான காளை உயிரிழப்பு: ரசிகர்கள் சோகம்

image

வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் ஒற்றைக் கொம்பு காளை உடல்நலக்குறைவால் நேற்று (ஏப்ரல் 1) உயிரிழந்தது. எருது விடும் விழாக்களில், இந்த காளை பல பரிசுகளை வென்றுள்ளது. ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு இதன் ஆட்டம் வியப்பாக இருக்கும். ஒரு போட்டியில் ஒரு கொம்பை இழந்தாலும், இன்னொரு கொம்புடன் களத்துக்கு வந்து சீறிபாய்ந்ததை ரசிகர்கள் யாராலும் மறக்க முடியாது. இதன் மறைவால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

error: Content is protected !!