News March 22, 2024
பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக கூட்டம்

திருநெல்வேலியில் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று (மார்ச் 22) கூடியது. இந்த கூட்டத்திற்கு பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் பவானி வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் கடந்த வாரம் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடன் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து இதுவரை எந்த பதிலும் வராதது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது.
Similar News
News August 16, 2025
நெல்லை அரசு பள்ளி மாணவி விமான பயணம்

திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி சபரி சந்தியாவும், அவருடன் ஆசிரியை நாலாயிரமும் அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் எம்பி சவுந்தராஜன் ஏற்பாட்டில் விமானத்தில் 2 நாள் சுற்றுலா அனுப்பி வைக்கப்பட்டனர். முதலிடம் பெற்ற மாணவி சபரி சந்தியா முதன்முதலாக விமானத்தில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது .
News August 16, 2025
JUST IN நெல்லையில் சுற்றுலா பயணி பலி

அம்பை அருகே ஆலடியூர் நதியுண்ணி கால்வாய் பகுதிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த பொன் சூரியன் என்பவர் குளிக்கும் போது மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கினார். வாலிபரை தேடும் பணியில் சேரன்மகாதேவி மற்றும் அம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரது சடலத்தை மீட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
News August 16, 2025
நெல்லை 70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சுதந்திர தினத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் 145 நிறுவனங்களை தொழிலாளர் துறை ஆய்வு செய்ததில், 70 நிறுவனங்கள் விதிமீறலில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டு, உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.