News August 5, 2024
பூம்புகார் விற்பனை நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

சேலம், அண்ணா பட்டு மாளிகை வளாகத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தினை தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குநர் அமிர்தஜோதி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிருந்தாதேவி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது துறை சார்ந்த அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Similar News
News February 10, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.10) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News February 10, 2026
அமித்ஷா சேலம் வருகை? CLARITY

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 14-ல் சேலம் வருவதாகவும், அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை என பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் கோபிநாத் தெரிவித்துள்ளார். அமித்ஷா வருகை குறித்து இன்னும் முடிவாகவில்லை என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News February 10, 2026
சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


