News August 7, 2025

பூம்புகாரில் பாமக மாநாடு-ஐஜி ஆலோசனை

image

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க மகளிர் மாநில மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று பூம்புகார் காவல் நிலையத்தில் மாநாட்டுப் பந்தல் வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்ட காவல்துறை ஐஜி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Similar News

News August 10, 2025

அடிப்படை வசதிகள் செய்து தர அறிவுறுத்தல்

image

பூம்புகார் வன்னியர் சங்க மகளிர் மாநாடு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இரட்டை அடுக்கு தடுப்புகள் அமைத்தல்,மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளது.

News August 10, 2025

மகளிர் மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட்ட டாக்டர் ராமதாஸ்

image

மயிலாடுதுறை, சீர்காழி அருகே பூம்புகாரில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மகளிர் மாநாடு இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக பூம்புகாரில் மிகப்பெரிய பந்தல் , பார்வையாளர்கள் அமர இருக்கைகள், சுகாதார வசதிகள் போன்றவற்றின் இறுதிக்கட்ட பணிகள் நேற்று இரவு நிறைவடைந்த நிலையில் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் நேற்று இரவு பூம்புகார் வருகை தந்து ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

News August 10, 2025

மயிலாடுதுறை: டிகிரி போதும்.. அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த 40 வயதிற்குப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.68,400 வரை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!