News November 16, 2024
பூம்பிடாகையில் புகையிலை பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி சரகம் அ.முக்குளம் அருகேயுள்ள பூம்பிடாகை பகுதியில் புகையிலை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனை மேற்கொண்ட போது ராமகிருஷ்ணன் என்பவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 9 புகையிலை பாக்கெட்டுக்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அ.முக்குளம் போலீசார் பூம்பிடாகையை சேர்ந்த ராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Similar News
News March 2, 2026
விருதுநகரில் +2 பொதுத்தேர்வு எழுதும் 22123 மாணவர்கள்

தமிழகம் முழுவதும் இன்று +2 பொதுத்தேர்வு துவங்க உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் 218 பள்ளிகளிலிருந்து 9855 மாணவர்கள், 11, 715 மாணவிகள் மற்றும் தனி தேர்வர்கள் 553 பேர் என மொத்தம் 22123 பேர் தேர்வெழுதுகின்றனர். இதற்காக 99 தேர்வு மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 99 தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
News March 1, 2026
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

வீரசோழனை சேர்ந்த சிவகாமி நரிக்குடி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய போது 2016-ம் ஆண்டு வீட்டிற்கு செல்லும்போது அரசு பஸ் மோதியதில் காயமடைந்தார். இழப்பீடு கோரி ஸ்ரீவி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் ரூ.30.68 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
News March 1, 2026
திருச்சுழி அமைச்சரின் தொகுதிக்கு கூட கொண்டு வரவில்லை – பேச்சு

மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், 60 ஆண்டுகால கோரிகையான காவேரி, குண்டாறு திட்டத்திற்காக ரூ.14500 கோடி அறிவித்து எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். அதில் 262 கிமீட்டரில் வெறும் 8 கிமீ மட்டுமே வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசின் தொகுதியில் உள்ள குண்டாறுக்கு கூட அந்த திட்டத்தை கொண்டுவர முடியவில்லை என்றார்.


