News January 23, 2026
பூமியை பார்த்தால் முட்டாள் தனமாக இருக்கும்: சுனிதா

விண்ணில் இருந்து பூமியை பார்க்கும் போது வாழ்க்கை பற்றி நமது எண்ணங்கள் மாறுபடும் என <<18912474>>சுனிதா வில்லியம்ஸ்<<>> தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் ஒரு கிரகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அவர், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, எளிதாக பணியாற்ற வேண்டும் என்பதை உணர வைக்கும் என்றார். மேலும், பூமியில் மனிதர்கள் இடையே நடக்கும் பிரச்னைகள், வாக்குவாதங்கள் எல்லாம் முட்டாள்தனமாக தோன்றும் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News January 24, 2026
மத்திய அரசை எதிர்ப்பதே திமுகவின் சாதனை: வானதி

செலவின கணக்கை சொல்லாமல், பொத்தாம் பொதுவாக நிதி வரவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டுவதாக வானதி சாடியுள்ளார். ஸ்டிக்கர் ஒட்டுவதையும், மத்திய அரசுக்கு எதிராக பேசுவதை மட்டுமே சாதனையாக வைத்து திமுக ஆட்சி நடத்துவதாகவும் விமர்சித்துள்ளார். TN-ன் தொழில் வாய்ப்புகள் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றும், அமைச்சர்கள் மீதான புகார்களுக்கு எந்த விளக்கமும் அரசுத் தரப்பில் இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார் .
News January 24, 2026
BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை, மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை ₹560 உயர்ந்த நிலையில், மதியம் ₹1,040 உயர்ந்துள்ளது. இதனால் ஒரேநாளில் கிராமுக்கு ₹200 உயர்ந்து ₹14,750-க்கும், சவரனுக்கு ₹1600 உயர்ந்து ₹1,18,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
News January 24, 2026
சற்றுமுன்: விஜய் மாற்றினார்

தவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்தது முதலே அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில், விஜய்யின் X பக்க கவர் போட்டோ மாற்றப்பட்டுள்ளது. அதில் விசில் சின்னம் இடம்பெற்றது மட்டுமல்லாது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற வார்த்தைகளில் வழக்கமான சிவப்பு, மஞ்சள் நிறங்களுடன் மேலும் சில நிறங்களும் இடம்பெற்றுள்ளது பேசுபொருளாகியுள்ளது. எதற்காக இவை பயன்படுத்தப்பட்டன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.


