News August 19, 2024
பூமிக்கு மிக அருகில் வரும் சிறுகோள்

2024 JV33 சிறுகோள், பூமிக்கு மிக அருகில் இன்று கடந்து செல்லவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சுமார் 620 அடி விட்டம் கொண்ட இந்த சிறுகோள், சுமார் 28.5 லட்சம் மைல் தொலைவில் பூமியை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியை அடிக்கடி கடந்து செல்லும் வகையை சேர்ந்த இந்த சிறுகோள், மணிக்கு 24,779 மைல் வேகத்தில் விண்வெளியில் பயணித்து வருகிறது. இதனை விஞ்ஞானிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
Similar News
News April 9, 2026
3 மாநிலங்களில் இன்று தேர்தல்!

கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. PM மோடி, ராகுல் காந்தி உள்பட அரசியல் தலைவர்கள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், கடந்த 7-ம் தேதியுடன் பிரசாரம் முடிந்தது. இதனையடுத்து இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என ECI அறிவித்துள்ளது.
News April 9, 2026
ஒரு நல்ல மனிதன் செய்யும் வேலையா இது? சசிகலா

அதிமுகவில் துரோகிகள் அதிகமாகி விட்டனர் என EPS, OPS-ஐ சசிகலா விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் மீதும், ஜெயலலிதா மீதும் வழக்கு போட்டு சிறையில் அடைத்த திமுகவை தாய் கழகம் என்று OPS எப்படி சொல்ல முடியும் என கேள்வி எழுப்பினார். அதிமுகவில் அமைச்சர் தொடங்கி முதல்வர் வரை உயரிய பதவிகளை வழங்கியும் OPS இந்த முடிவை எடுத்தது நியாயமா? ஒரு நல்ல மனிதன் செய்யும் வேலையா இது என சாடியுள்ளார்.
News April 9, 2026
மதுவில் வருமானம் ஈட்டும் டாப் 5 மாநிலங்கள் தெரியுமா?

ஒவ்வொரு தேர்தலிலும் மதுவிலக்கும், மதுக்கடைகள் குறைப்பும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் தவறாமல் இடம்பெற்றுவிடும். ஆனால் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அதை நிறைவேற்றுகிறதா என்றால் ஏமாற்றமே. ஆனால் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியே பல மாநிலங்கள் தங்களின் வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்கை பெறுகின்றன. அதில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதை காண வலது பக்கம் Swipe பண்ணுங்க.


