News January 29, 2025

பூனையானூர் அருகே தனியார் பஸ் மோதி வாலிபர் பலி

image

பி.பள்ளிப்பட்டி அருகே உள்ள அஜ்ஜம்பட்டியை சேர்ந்த சக்திவேல் (23). கட்டிட தொழிலாளி. இவர் தனது நண்பர் லோகேஷ்வரனுடன் நேற்று அரூர்-க்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது பூனையானூர் அருகே வந்த போது தனியார் பஸ், பைக்மீது மோதியது. இந்த விபத்தில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் லோகேஸ்வரன் படுகாயமடைந்தார். விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Similar News

News September 23, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (செப்.22) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

News September 22, 2025

தருமபுரி அருகே தந்தை, மகனுக்கு ‘காப்பு’

image

கடத்துார் அடுத்த மணியம்பாடி வருவாய் கரடு பகுதியில், கற்றாழை தோட்டம் உள்ளது. அங்கு கற்றாழை வெட்டி கடத்தப்படுவதாக வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி வனவர் கணபதி உள்ளிட்ட அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லம்பள்ளியை சேர்ந்த முருகன், அவரது மகன் சிவலிங்கம், ஆகியோர் திருட்டுத்தனமாக கரடு பகுதியில் வெட்டி வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். ரூ.30,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News September 22, 2025

தருமபுரி: பெண்களுக்கு செம்ம வாய்ப்பு – வங்கி கடன் திட்டம்!

image

தருமபுரி மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 லட்சம் முதல் கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இது குறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!