News July 18, 2024

பூந்தமல்லியில் 2 டன் குட்கா பறிமுதல்; 3 பேர் கைது

image

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில், இன்று(ஜூலை 18) லாரி ஒன்றை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அதில் 2 டன் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து விசாரித்த போலீசார், வட மாநிலத்தைச் சேர்ந்த ராஜலிங்கம், லிங்கதுரை, தமிழ் ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்கள் பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

Similar News

News August 22, 2025

திருவள்ளூரில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

image

திருவள்ளூர் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த <>இணையதளம் <<>>மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

News August 22, 2025

திருவள்ளூர்: போர்க்லிப்ட் ஆபரேட்டர் பயிற்சி

image

திருவள்ளூர் மாவட்டம் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு போர்க்லிப்ட் ஆப்ரேட்டர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வயது 18 முதல் 35 இருக்க வேண்டும். பயிற்சி பெற விரும்புவார்கள்(www.tahdco.com) என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

News August 22, 2025

திருவள்ளூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் தாட்கோ (www.tahdco.com) என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!