News May 7, 2024

பூதலூர்: சோழர் கால நந்தி, விஷ்ணு சிலைகள் கண்டெடுப்பு

image

பூதலூர் அருகே சித்திரக்குடியில் சத்தியா என்பவரின் நிலத்தில் நந்தி மற்றும் விஷ்ணு சிலைகள் பாதி புதைந்த நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில், சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறன் ஆய்வில் ஈடுபட்டார். அதில், இந்த சிலைகள் கி.பி. 9 முதல் 10ம் நூற்றாண்டை சேர்ந்ததாகவும், சோழர் காலத்தில் முக்கிய பகுதியாகவும் இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Similar News

News February 3, 2026

தஞ்சை: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<> ‘Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 3, 2026

தஞ்சை: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு<> உழவன் App <<>>மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்.

News February 3, 2026

பாபநாசத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.. திடீர் திருப்பம்

image

திருப்பாலைத்துறை அவுல்கார தெரு சந்து பகுதியில் கடந்த வாரம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தீயில் கருகிய நிலையில் உயிரிழந்து இடந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தவர் திருப்பாலைத்துறை வெள்ளை பிள்ளையார் தெருவை சேர்ந்த முகமது அலி என்பதும், உடல்நலக்குறைவால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

error: Content is protected !!